search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி விடுதி"

    • கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
    • சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றையின் கட்டுப்பாட்டின் கீழ், 7 கல்லூரி விடுதிகள்

    (3 மாணவர்கள் விடுதிகள், 4 மாணவிகள் விடுதிகள்) செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகள் சேர்ந்து பயனடையலாம்.

    இதற்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மாணவர்களின் வீட்டிற்கும் கல்லூரிக்கும் உள்ள தூரம் 5 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்.

    (பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூரில் பணி புரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது).

    ஆதிதிராவிடர் நல விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் 85 சதவீத மும், மிகவும் பிற்படுத் தப்பட்ட வகுப்பினர் 10 சதவீதமும், பிற வகுப்பினர் 5 சதவீதமும் சேர்க்கப்படு கின்றனர்.

    மாணவ- மாணவி களுக்கு விடுதிகளில்3 வேளைகளில் தரமான உணவு வழங்கப்படுகிறது. 2023-24-ம் ஆண்டிற்கு தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பாஸ்போட் சைஸ் போட்டோ-3, வங்கிக்கணக்கு புத்தக நகல். சாதிச்சான்று, வருமான சான்று, பள்ளி மாற்று சான்று, நன்னடத்தை சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் கல்வி நிலையத்தலைவரால் அளிக்கப்படும் படிப்புச் சான்றிதழ் ஆகியவற்றுடன் 30-ந் தேதி வரை ஒப்படைத்து விட்டு https://tnadw.hms.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

    • விழிப்புணர்வு கூட்டத்தில் ஊழியர்களுக்கு அறிவுரை
    • போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, மாண வர்களை கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து தொகுதி வாரியாக குழுமம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளி,கல்லூரி விடுதி களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கும் கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது.

    கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, உதவி இயக்குநர் மற்றும் போதை பொருள் தடுப்பு அலுவலருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு போதைபொருள்கள் வெளி இடங்களிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசுத் துறையினரும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீரா சாமி, கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    • வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.
    • காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    புதியம்புத்தூர்:

    ஓட்டப்பிடாரம் அருகே உள்ள நாகம்பட்டி கிராமத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி உள்ளது.

    வாசுதேவநல்லூர், செங்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை விடுதியில் தங்கி உள்ளனர்.அதுபோல் குப்பக் குறிச்சியை சேர்ந்த மாணவர்களும் இதே விடுதியில் தங்கியுள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் மின்விளக்கை போடுவது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விடுதி காப்பாளர் சம்பந்தப்பட்ட மாண வர்களை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் வெளியிலிருந்து நண்பர்களை வரவழைத்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த 3 மாணவர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன், தாசில்தார் சுப்புலட்சுமி, பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர்கள் சீதாராமன், மார்த்தாண்ட பூபதி கல்லூரி சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×